கோடை வெப்பத்தின் தாக்கத்தால் இளநீரை நாடும் மக்கள்

கோடை வெயிலின் தாக்கத்தால் வந்தவாசி பகுதியில் மக்கள் இளநீர் நாடி செல்வதால், விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலை சமாளிப்பதற்காக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளநீர் குடித்து வருகின்றனர். கடைகளில் விற்பனையாகும் ரசாயன குளிர்பானத்தை விட இளநீர் உடலுக்கு நல்லது என்பதால் மக்கள் இளநீரை நாடி செல்கின்றனர். தற்போது இளநீர் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இளநீர் இயற்கையான பானம் என்பதால் வெயில் காலங்களில் புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும், அம்மை போன்ற நோய்களை தடுப்பதற்கு இளநீர் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதால் இளநீர் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

Exit mobile version