காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மிசோராம் மாநிலம், லுங்கி நகரில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காங்கிரசின் செயல்பாடு காரணமாக மிசோராமில் பல திட்டங்கள் தாமதமானதாக குற்றம்சாட்டிய அவர், இதனால், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை என விமர்சித்தார்.
அமைதி மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்த அவர், காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருவதாக மோடி குறிப்பிட்டார்.