சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலையிலேயே குவிந்த பொதுமக்கள்

சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க காலை முதலே விற்பனையகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

தினந்தோறும் 200 பேருக்கு மருந்து விற்பனை செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், குறைந்தளவிலான மருந்துகள் மட்டுமே விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில், இன்று ரெம்டெசிவிர் மருந்தை வாங்க, காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் விற்பனையகம் முன்பு குவியத் தொடங்கினர்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், மக்களை பாதுகாப்பு இடைவெளி விட்டு நிற்கவும், அமரவும் வைத்தனர்.

இன்று 300 டோஸ் மருந்துகள் மட்டுமே வந்துள்ள நிலையில், ஒரு நபருக்கு 6 டோஸ் வீதம், 50 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஒரு நபருக்கு 3 டோஸ் வீதம் 100 பேருக்கு மருந்து வழங்கப்பட்டதால், மீதமிருந்த பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

Exit mobile version