வடிகால் அமைத்து கொடுத்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

மக்களின் கோரிக்கையை ஏற்று வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் வீடுகளுக்கு தண்ணீர் புகுவதை தடுக்கும் பொருட்டு வடிகால் வாய்க்கால் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று கடலூர் நகராட்சி மழைநீர் வடிகால் வாரிய பணியின் கீழ் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. செம்மண்டலம், வள்ளியம்மை நகர், வில்வநகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், கடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version