தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கில் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நடமாடும் வாகனங்கள் மூலம் தோட்டக்கலை துறை உதவியுடன் காய்கறிகள், பழங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்ததது. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் ஊரடங்கின் இரண்டாவது நாளிலேயே காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகராட்சியில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைப்பதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலையும் பல மடங்கு விலை உயர்ந்து காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் அதுபோல் ஏதும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.