கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கியது போல், தொடர்ந்து வழங்க வேண்டும் என உதகையில் பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழை ஏளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 ம் ஆண்டு திறந்துவைத்தார். கடந்த 10 வருடங்களாக மலிவான விலையில் உணவை வழங்கி வரும் அம்மா உணவகம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை . இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரும் முன்னரே திமுகவினர், அதிமுகவின் சிறப்பான ஆட்சியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் அம்மா உணவகத்தை சூரையாடி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினரின் இந்த செயலால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகம் மூலம் அதிமுக அரசு இலவசமாக அனைவருக்கும் உணவு வழங்கியது போல தற்போது பொறுப்பேற்கவுள்ள திமுக அரசும் தொடர்ந்து இதே விலையில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.