மேட்டூர் அணை அடிவரத்தில் பரிகாரம் செய்பவர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை அகற்ற கோரிக்கை

மேட்டூர் அணையின் அடிவாரப்பகுதியில் பரிகாரம் செய்ய வருபவர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அடிவாரப்பகுதியில் அமாவாசை, பவுர்ணமி போன்ற மங்களகரமான நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருபவர்களும், பரிகாரம் செய்பவர்களும் பெருமளவில் வருகை தருகின்றனர்.

இவர்கள் தங்களின் பரிகாரம் முடிந்தததுடன், தங்களது ஆடைகளை அப்படியே காவிரி ஆற்றில் விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைக்காடாக தோற்றமளிக்கிறது. இந்நிலையில் பரிகாரம் செய்ய வருபவர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை அகற்றவும், பரிகாரம் செய்ய தனி இடத்தை உருவாக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version