வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும்படி பொதுப்பணித்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரமாக வைகை அணை விளங்குகிறது. 172 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவைகளையும் பூர்த்தியாகிறது.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வடவீரநாயக்கன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் பொதுமக்கள், அதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.