கடலூர் மாவட்டத்தில் குறுகிய வடிகால் பாலத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் பாசனத்திற்கும், வடிகால் தண்ணீரை வெளியேற்றவும் குறுகிய பாலம் ஒன்று உள்ளது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இந்த பாலம் வடக்கு ராஜன் வாய்க்காலில் இணைக்கப்பட்டு 25 ஷட்டர்களுடன் உள்ளது. இந்தப் பாலத்தின் மீது செல்லும் சாலையானது சென்னை மற்றும் கும்பகோணத்தை இணைக்கும் சாலை என்பதால் தினசரி பல வாகனங்கள் சென்று வருகின்றன.
பாலம் குறுகியதாக இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாகவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். எனவே, குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி பெரிய பாலமாக மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.