நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில், தொடர் மின்வெட்டுக்கு காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கையால், தமிழக மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் மின்வெட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்தநிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில், தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டு காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தும் இல்லத்தரசிகள், அத்தியாவசியப் பணிகளைக் கூட செய்யமுடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், மின்சாரத்தை நம்பி, மரம் அறுவைப் பட்டறை, மாவு மில் தொழில் செய்வோரும் கடும் இழப்பை சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சிலர் வேலை இழந்து தவிக்கும் அவல நிலையும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில், சீரான மின்சாரத்தை கொடு, இல்லையெனில் மின் வாரியத்தை பூட்டு” என்ற சுவரொட்டிகள் திசையன்விளை பேரூராட்சிக் கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.