போக்குவரத்து நெரிசலை களத்தில் இறங்கி சரிசெய்த அமைச்சர்

சத்தியமங்கலம் அருகே போக்குவரத்து நெரிசலை இறங்கி சரிசெய்த அமைச்சர் கருப்பணனின் செயல் பலரது பாராட்டை பெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சரிவர செல்ல முடியாது நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் காரில் இருந்து, இறங்கி காவலர்களோடு சேர்ந்து, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். மக்களோடு, மக்களாக அவர் பணியாற்றியது, அதிமுகவினர் எளிமையானவர்கள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று என்று பொதுமக்கள் பாராட்டினர்.

Exit mobile version