அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலை, எப்பொழுது வருகிறதோ, அப்போதுதான் கோயில்கள் திறக்கப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர், தொற்று எண்ணிக்கை முற்றிலுமாக இல்லை என்ற நிலை வரும் போது தான் கோயில்கள் திறக்கப்படும் என்று கூறினார். அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறையாத போது டாஸ்மாக் கடைகளை திறக்கும் திமுக அரசு, கோயில்களை ஏன் திறக்கக் கூடாது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version