திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதைக் கண்டித்த காவல்துறையினருடன், அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசர், அதற்கான சான்றிதழை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு சென்றார். அப்போது தொண்டர்கள் டிரம் செட் அடித்தும், பட்டாசுகளை வெடித்தும் ஆரவாரம் செய்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பட்டாசு வெடிப்பதால் இடையூறு ஏற்படுவதாக போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள், போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரசாரின் இந்த செயலைக் கண்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.