முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால், மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்றும், இன்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பேருந்துகள் முறையாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாகவும், கொரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில் பயணம் மேற்கொள்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version