சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தால், 18 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், திரும்பிச் செல்ல வாகனங்கள் இல்லாததால், கடும் அவதிக்குள்ளாகினர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் 18-மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐய்யப்பனை தரிசித்துச் செல்கின்றனர்.
மேலும், கோவிலின் வளாகத்திலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள், பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவதுடன், நிலக்கல்லில் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், உரிய நேரத்தில் பக்தர்கள் சன்னிதானத்திற்க்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், ஐயப்ப தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு சரியான பேருந்து வசதிகள் கிடைக்காததால், அவர்களும் நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். இனி வரும் நாட்களிலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், கூடுதலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.