சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று 180 நாடுகளுக்கு அதிகமாக காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதுவரை சீனாவில் 81 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 304 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. ஹூபே மாகாணத்தில் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவில் மக்கள் முக கவசம் அணிந்து வீதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதையடுத்து அனைத்து போக்குவரத்து சேவைகளையும் சீன அரசு தொடங்கியுள்ளது.