சோழவந்தானில் நடைபெற்ற தினகரன் ஆதரவாளர்கள் பொதுக் குழு கூட்டத்தில், மக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்
மதுரை மாவட்டம், சோழவந்தானில் தினகரன் ஆதரவாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே காணப்பட்டன. இதனால் மேடையில் இருந்தவர்கள் செய்வதறியாது குழம்பித் தவித்தனர். பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்த நிலையில் கூட்டமும் முடிவடைந்தது. மக்கள் ஆதரவில்லாமலேயே தினகரன் ஆதரவாளர்களின் கூட்டம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.