தொடர் மழை காரணமாக வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையினால் வெப்பம் குறைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அக்னி நட்சத்திர வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், மாலையில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது
வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version