6 மணி முதல் தொடங்கின தளர்வுகள்… மீண்டும் குவியும் மக்கள்

கடந்த இரு வாரங்காளாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இன்று முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மே 24 முதல், இன்று காலை 6 மணி வரை, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துப்பட்டிருந்த்து. தற்போது இந்த ஊரடங்பு வரும் 14ம் தேதி காலை, 6 மணி வரை, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு காலை முதல் அத்தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள். காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், இன்று காலை 6 மணி முதல் திறக்கபட்டன.

சென்னையில் அனைத்ரு பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் காலையிலே அத்தியாவசிய பொருட்கள் வாங்கௌ கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

Exit mobile version