காசிமேட்டில் கொரோனா வழிகாட்டுதலை காற்றில் பறக்கவிட்ட அசைவ பிரியர்கள்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றாமல், அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க முண்டியடித்தனர்.

வார விடுமுறை என்றாலே திருவிழா போன்று காட்சி அளிக்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை 3 மணி முதல் 8 மணிவரை மீன்கள் விற்பனை ஜோராக நடைபெறும்.

இங்கு மீன்களை வாங்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அசைவ பிரியர்கள் இன்று காலை குவித்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு அறிவித்த வழிகாட்டுதலை பின்பற்றாமல், மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.

இதனால், வவ்வால், மாவலாசி, சங்கரா, வஞ்சிரம், இறால் உள்ளிட்ட மீன்களின் விலை, இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன.

பொதுமக்கள், முககவசம் மற்றும் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

Exit mobile version