கருத்துக் கணிப்பு எல்லாம் பொய் என்றும் அவை கருத்து திணிப்பு என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்து மக்களை குழப்பிக் கொண்டிருப்பவர்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்தார். கருத்துக் கணிப்புகள் திமுவினரால் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெற்றால் தூத்துக்குடியில் உப்பளமும் பனைத்தொழிலும் பாதுகாக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.