மழை பெய்ய வேண்டி கும்மியடித்து வழிபட்ட 600 க்கும் மேற்பட்ட பெண்கள்

மேலூர் அருகே மழை பெய்ய வேண்டி 600 க்கும் மேற்பட்ட பெண்கள் பழமை மாறாமல் கும்மியடித்து வழிபடும் வினோத திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள சூரக்குண்டு கிராமத்தில் சின்னடக்கி மற்றும் பெரியடக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த 8 நாட்களுக்கு முன்னர் காப்பு கட்டப்பட்டு திருவிழா ஆரம்பமானது.காப்பு கட்டியது முதல் 8 நாட்கள் வரை, இரவு நேரங்களில் ஊர்மந்தையில் கூடும் கிராமப் பெண்கள், அங்கு கும்மியடித்து வழிபாடு நடத்துவர் .அதன்படி, திருவிழாவின் முக்கிய நாளான இன்று அவ்வூரைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பெண்கள், ஒன்று கூடி இரவு முழுவதும் மந்தையில் கும்மியடித்து வினோத வழிபாடு நடத்தினர் .

முன்னதாக, கிராமத்தலைவர்கள் முன்னிலையில், ஆரம்பத்தில் சிறிய வட்டாமாக காணப்பட்ட கும்மியடிவிழா, தொடர்ச்சியாக பெண்கள் வரத்தொடங்கியதும், மிகப்பெரிய வட்டமாக மாறி இசை வாத்தியங்களுடன் கும்மியடித்து கொண்டாடப்பட்டது.மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழித்து மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், ஆண்டுதோறும் பெண்கள் இவ்வாறு கும்மியடித்து வழிபடுவதாக, கிராம மக்களும் ஊர்தலைவர்களும் தெரிவித்தனர். 

Exit mobile version