கள்ளக்குறிச்சி அருகே திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய, வேல்முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலைந்து சென்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பரப்புரை மேற்கொண்டார்.
இது தெரியாமல் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், திமுக வேட்பாளருக்கு ஆதரவு தர முடியாது எனக்கூறி பாதியிலேயே வெளியேறினர். அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களுக்கு, திமுகவினர் கூலி வேலை தருவதாகக் கூறி பணம் கொடுத்து, அழைத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.