கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்ந்து போகாமல் இருக்க சல்பர் பொடி தூவுவதால் தண்ணீர் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் அதிக அளவில் ரப்பர் மரங்கள் உற்பத்தியில் முன்னனியில் உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. நல்ல லாபம் கிடைப்பதால் இங்குள்ள மலைப்பகுதிகளை ஒட்டிய வயல்வெளிகளில், தென்னந்தோப்புகள் முற்றிலும் அளிக்கப்பட்டு, ரப்பர் மரங்களாக மாற்றப்பட்டன. இந்த நிலையில் ரப்பர் மரங்களில் ஏற்பட்டுள்ள பூஞ்சனந் தொற்று நோய் காரணமாக சல்பர் பவுடரை தூவுவதால் இங்குள்ள தண்ணீரில் கலந்து மாசுபாடு ஏற்படுவதாகவும், இதனால் ஆஸ்துமா, புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்