மக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மக்களுடைய எதிர்பார்ப்புகளை உணர்ந்துகொள்ளும் நிலையை தி.மு.க. தொலைத்துவிட்டு, அதை கண்டுபிடிப்பதற்காக பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில், பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் உணர்வை புரிந்துகொள்ளும் நிலையை திமுக தொலைத்துவிட்டதாகவும், அதனை, பிரசாந்த் கிஷோர் என்பவர் மூலம் அவர்கள் தேடி வருவதாகவும் விமர்சித்தார். இதன்மூலம் தி.மு.கவினர் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

Exit mobile version