தமிழகமெங்கும் வெயில் வாட்டிவரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழக முழுவதும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்த வெயில் காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களில் இருந்து மக்களை காக்கும்வகையில், தர்பூசணி, நுங்கு போன்றவை அதிகளவில் விற்பனை ஆகிவருகிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படும் அம்மை உள்ளிட்ட நோய்களை தடுக்கும் ஆற்றல் நுங்கிற்கு உண்டு என்பதால் அதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்யும் இந்த நுங்கை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கல்வராயன் மலைப்பகுதியில் அதிகளவில் விளையும் நுங்கு, விற்பனைக்கு வந்தவுடன் உடனுக்குடன் விற்பனை ஆகிவிடுகிறது.