திருநெல்வேலி சுற்று வட்டார பகுதியில், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் வேர்க்கடலையின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெல்லை கடையநல்லூர் பகுதிகளில் அதிகளவில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் வேர்க்கடலையை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு சந்தையில் பெரும் வரவேற்பு கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், சந்தையில் ஒரு குவிண்டாலின் விலை 4 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரத்தி 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், நீர் நிலைகள் நிரம்பியுள்ளதாகவும், இதனால் இரண்டாம் கட்ட சாகுபடி பணிகளை தொடங்கவுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.