2019-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் தேர்வுக்குழு 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்தது. அதன்படி, எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எரித்தியா எல்லை பிரச்னையில், அமைதியான முறையில் தீர்வு கண்டதற்காக, இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், வரும் 14 ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.