கொரோனா பரிசோதனை செய்வதற்காக, கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள், வரும் திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை, உலகின் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் பிசிஆர் கிட்கள், கடந்த வாரம் தமிழகம் வந்தடைந்தன. இதன் தொடர்ச்சியாக, 1 லட்சத்து 50ஆயிரம் பிசிஆர் கருவிகள் மும்பை வந்துள்ளது. இந்த கருவிகள் திங்கட்கிழமை தமிழகம் வர உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் தலா ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வீதம், மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் கருவிகள் வரவுள்ளதாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.