இந்தியா முழுவதும் 10,40,000 பேருக்கு பிசிஆர் பரிசோதனை!

நாடு முழுவதும் பிசிஆர் பரிசோதனை மூலம், இதுவரை 10 லட்சத்துத்திற்கும் மேற்படோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 39 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 323 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வரை நாடு முழுவதும் 10 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் 70 ஆயிரம் பேருக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று மாநிலங்களிலும் தலா ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு சோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா, உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மநிலங்கள், இன்னும் தங்கள் சோதனைத் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

Exit mobile version