தேர்தல் நேரத்தில், டோக்கன் கொடுத்து, பின்னர் அதற்கு பணம் வழங்கி வந்த அமமுகவினர், தற்போது நேரடியாக, கூட்டத்தின்போதே பணப் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வெளியில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.
கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபம் அருகில், எஜென்டுகள் மூலம் மறைமுகமாக, ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் வீதம், தேர்தல் விதிமுறையை மீறி பணம் பட்டுவாட செய்ததாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு பணம் கொடுத்தும் கூட, அமமுகவின் கூட்டத்திற்கு ஆட்கள் வராததுதான் பரிதாபம். கூட்டத்தில், ஏராளமான சேர்கள் காலியாகவே இருந்தது. ஆனாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில், அங்கீகாரம் வழங்கப்படாமலேயே இவ்வளவு கூட்டம் வந்திருப்பதாக வேட்பாளர் பான்டுரங்கன் பேசியது வேடிக்கையாக இருந்தது.