கோடைகாலத்தில் ஏசி பயன்படுத்துவோர், அதனை எவ்வாறு பராமறிக்க வேண்டும் என்பது குறித்தும், தீ பிடித்தல் போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் என்ன என்பதையும் விவரிக்கிறது இந்த தொகுப்பு…
பொதுவாக வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி, இயல்பான நிலையில்தான் இருக்கிறதா என நாம் பெரும்பாலும் பார்ப்பதில்லை. திடிரென ஏசி பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே அதன் மீது கவனம் செலுத்துகிறோம்.
ஏ.சி வாங்குபவர்கள், முதலில் வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு ஏ.சி-யை தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில் ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. அவற்றில்.
150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.
ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த வேண்டும்.
ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ப்யூஸை பொருத்த வேண்டும்.
தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது.
எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு போகக்கூடாது.
3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும்
ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது தவறு
நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது.
இயந்திரமயமாகிப்போன நம் வாழ்வில் சுத்தமான காற்று கிடைப்பது என்பது மிக அரிது. கோடையை சமாளிக்க தவணை முறையிலாவது ஏசியை வாங்கி உபயோகிக்கும் நாம் அதனை பராமறித்தால்தான்தொடர்ந்து பயன்படுத்த முடியும் அதற்கு நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்… நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பிரேம்நாத் மற்றும் யோகேஷ் உடன் செய்தியாளர் பவித்ரா.