நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ நீதிமன்ற கட்டடத்தை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்தார்.
சிறு பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தக் கூடிய கயவர்களை தண்டிக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு போக்சோ சட்டம் இயற்றி உள்ளது. இதனை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக, தமிழக அரசு போக்சோ நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நெல்லை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தனி போக்சோ நீதிமன்றம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்தார்.