மதுரையில், அடகு கடை பூட்டை உடைத்து சுமார் ஆயிரத்து 500 சவரன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நரிமேடு பகுதியில் கோபிநாத் என்பவர், அவரது வீட்டின் ஒருபகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். கடையை மீண்டும் திறக்கும் போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள், வெல்டிங் செய்து உடைக்கப்பட்டு, ஆயிரத்து 484 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
நரிமேடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், நகைகளை அடகு வைத்துள்ளனர்.இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.