தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் நிராகரித்துள்ளார்.
மருத்துவ மாணவியான நிர்பயா கொலை வழக்கில் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மறு சீராய்வு செய்ய கோரி, பவன்குமார் சார்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன்குமார் சார்பில் கருணை மனுவை அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே முகேஷ்சிங், வினய் ஷர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பவன்குமாரின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர், நிராகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தூக்கு தண்டனையில்இருந்து தப்பிக்கும் பவன்குமாரின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து விரைவில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேரையும், நேற்று காலை தூக்கிலிட வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.