தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பல மணி நேரம் காத்திருப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை பல மணி நேரம் காத்திருக்க வைத்து, உணவு, குடிநீர் கூட வழங்காததால், நோயாளிகள் 108 வாகனத்தில் ஏற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுக்காவேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 13 நபர்களுக்கு, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மதியம் 1மணிக்கு அழைத்துவரப்பட்ட நோயாளிகள், இரவு 9 மணி வரை மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்படமால் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

காத்திருந்த நேரத்தில், நோயாளிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்காமல், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியம் காட்டியதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர்.

இதனால், மனஅழுத்தத்திற்கு ஆளான நோயாளிகள், 108 வாகனத்தில் ஏற மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாடு அரசின் மெத்தனபோக்கால், ஆங்காங்கே உயிரிழப்புகளும், இதுபோன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

Exit mobile version