கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம்: மத்திய அரசு திட்டவட்டம்

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களில் புனித தலமான கர்தார்பூர் சாஹிப்பிற்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யோக வழித்தடம் நாளை திறக்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில், அதனை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. இந்திய பக்தர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர பாகிஸ்தான் ராணுவம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால், இந்திய பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், கர்தார்பூர் செல்லும் இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தகவல்கள் முரண்பட்டதாக உள்ளது என கூறியுள்ளார். மேலும், பல்வேறு அரசியல் சூழல்கள் நிலவுவதால் கட்டாயம் பாஸ்போர்ட் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version