செங்கோட்டை மார்க்கமாக இயக்கப்பட்ட கொல்லம், வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கொல்லம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் செங்கோட்டை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட சிறப்பு ரயில் கொல்லம் சென்றடைந்தது. மீண்டும் நாகர்கோவில் புறப்பட்ட ரயில் பாவூர்சத்திரத்தை அடைந்தது. சிறப்பு ரயிலை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறப்பு ரயிலானது திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஆன்மீகதலங்கள் இணைக்கும் வகையில் இயக்கப்படுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறப்பு ரயிலை தினசரி இயக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.