10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய பயணிகள் ரயில் சேவை

10 ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூர், காரைக்குடி பயணிகள் ரயில் சேவை மீண்டும்தொடங்கியதையடுத்து, பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர், காரைக்குடி இடையேயான குறுகிய ரயில் பாதையானது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, கடந்த மாதம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், 160 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருவாரூர், காரைக்குடி இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version