மயிலாடுதுறை – திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில் இயக்கம்

மயிலாடுதுறை, திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து இயக்கப்பட்ட திருநெல்வேலி பயணிகள் ரயில், இருப்பு பாதை பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ரயில் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version