பாப்பிரெட்டிப்பட்டி அருகே புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அருகே புட்டிரெட்டிப்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நேரங்களில் நீண்ட நேரம் ரயில்கள் நிற்பதால் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்பவர்கள் மேம்பாலம் இல்லாததால் ஆபத்தான வழியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மேம்பாலம் அல்லது தரைவழி பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.