குளிர்ச்சியான தமிழ்நாடு

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான, எம்ஜிஆர் நகர், சாணார்பாளையம், குப்பண்டபாளையம் கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி மணிலா நெல் பயிர் விளைச்சலுக்கு நன்மை பயக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை ஆகிய மலைப்பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம், அலசந்திராபுரம் பகுதிகளிலும், வன பகுதிகளிர்னு திம்மகெடா நீர்வீழ்ச்சி, நீர்பிடிப்பு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. ஆவாரங்குப்பம் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Exit mobile version