திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மின்வெட்டால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் கூடவே வந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாணவ, மாணவிகள் ஆன்லைன் கல்வி கற்க முடியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மின்வெட்டால் இரவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் தூக்கமின்றி தவிப்பதாக கூறும் பொதுமக்கள், மின் வாரியத்திற்கு அழைத்தாலும் ஊழியர்கள் போன் எடுப்பதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை எவ்வாறு ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.