குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள்,அது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டுமென தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் குற்றங்களை செய்தவர்கள், தேர்தலில் போட்டியிட்டால், குற்ற சம்பவங்களை வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும். இது குறித்த தகவல்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய இணையதளங்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் இந்த உத்தரவை அமல்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்சம் 3 முறையாவது வெவ்வேறு தேதிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.