சிறுபான்மை மக்களை ஏமாற்றும் கட்சிகள் திமுக,காங்கிரஸ் – ஜி.கே.வாசன்

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் கட்சிகளாக திமுக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய வாசன், மதச்சார்பின்மை மதவாதம் என மக்களை ஏமாற்றும் பேச்சை திமுக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர் என்று விமர்சித்ததோடு, காங்கிரஸ் போட்டியிடுகிற மக்களவை தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட சிறுபான்மையினரை வேட்பாளரை நிறுத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version