நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் பயனாளிகளுக்கு 40 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர். இதில் 10 அரங்குகளில் கூட்டுறவு துறையின் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. புதிய இந்தியாவில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் விழாவில், அமைச்சர்கள் உறுதிமொழியை வாசிக்க, இதனை அனைவரும் உடன் வாசித்து ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 40 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் 915 பயளாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.