தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் இயக்குவதில் புதுமையான முயற்சிகளை கையாள்பவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கி நடித்திருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்டு முழுப்படத்தையும் இயக்கி வித்தியாசமான முயற்சியை கையாண்டிருந்தார்.
இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், “வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில், அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak-ஆன 25 வயது பெண் (சிரித்தால்… சில பசங்களையாவது சீரியஸாக்கி I c u- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை” என குறிப்பிட்டிருந்தார்.
இதனை குறிப்பிட்டு நடிகர் சதீஷ், தான் பெண் வேடமிட்ட புகைப்படத்தை அனுப்பி ஓ.கே. வா என கேட்டு கலாய்த்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், “இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு! தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம், தங்கம் இருந்தா ?” என நக்கலாக பதிலளித்துள்ளார்.
ஆனால், பார்த்திபனின் அடுத்தபடம் குறித்த பதிவு ட்விட்டரில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.