எந்த கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னை ராயபுரம் தொகுதியில், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிகழ்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கழக தலைமை பேச்சாளர் நடிகை விந்தியா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடியா திமுக அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும், சாலை ஓர சிறுகுறு வியாபாரிளை மிரட்டி காசு கேட்கும் அரசாக தான் விடியா அரசு உள்ளது எனவும் குற்றம்சாட்டினார். எந்த கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Discussion about this post