நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 35 க்கு மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தொடங்கி வரும் டிசம்பர் 13ம் தேதி வரை குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்ட மசோதா, மூன்றாம் பாலித்தனவர் உரிமை மசோதா, இ – சிகரெட் தடை மசோதா, சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக சார்பில் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அஜய் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஓம் பிர்லா குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடுத்தார்