நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல் நாடாளுமன்ற கூட்டம், கடந்த ஜுன் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர், இன்று துவங்கி, டிசம்பர் 13ம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கும் மசோதா, ‘இ – சிகரெட்’ தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களும், வாதங்களும் நடைபெற வேண்டியது முக்கியம் என்றும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

Exit mobile version